ஐபிஎல் போட்டி : முக்கிய மைல் கல்லை எட்டிய தோனி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோனி தனது 100வது கேட்ச்சை பிடித்து மைல்கல்லை எட்டினார்.


Advertisement

நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் மார்ச் மாதம் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸால் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது. அத்துடன் தோனி கடந்த ஒரு வருடமாக விளையாடமால் இருந்ததால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

image


Advertisement

அவர் ஏதேனும் சாதனை செய்வார், ரசிகர்கள் கொண்டாட வைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தனது புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார். இன்றைய போட்டியில் 2 கேட்ச்களை தோனி பிடித்தார். அதன்மூலம் ஐபிஎல் போட்டிகள் 100 கேட்ச்கள் என்ற மைல்கல்லை அவர் அடைந்திருக்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement