9 வயது மகனை கொலைசெய்த தாய்! - சிசிடிவியில் வெளியான அதிர்ச்சி உண்மை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


ஹிமாச்சல் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் நலகார் என்ற பகுதியில் கம்லேஷ் என்ற பெண், தனது காதலனான அஷோக் என்பவருடன் ஒன்றாக திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் 9 வயது மகன் வீட்டிற்கு வந்து இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்திருக்கிறான். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுபற்றி தன் கணவனிடம் கூறிவிடுவான் என்ற பயத்தில் தனது காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து, அருகிலிருந்த வயலில் தூக்கி வீசியிருக்கிறார்.


Advertisement

மாலை வீடு திரும்பிய அந்த பெண்ணின் கணவன் ஆஸ்ரா ராம், மகனை காணவில்லை என தனது மனைவியிடம் விசாரித்து இருக்கிறார். அவன் தனது அத்தை வீட்டிற்கு சென்றுவிட்டுத் திரும்பவில்லை எனக் கூறிவிட்டார். இதுகுறித்து செப்டம்பர் 14ஆம் தேதி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் ஆஸ்ரா. இரண்டு நாட்கள் கழித்து அருகிலிருந்த வயலில் குழந்தையின் உடலைக் கண்டுபிடித்திருக்கின்றனர் போலீஸார்.

image


Advertisement

அத்தை வீட்டிற்கு சென்றதாகக் கூறியதால் அவரிடம் விசாரித்திருக்கின்றனர். ஆனால், சிறுவன் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என தெளிவாகக் கூறிவிட்டார். இதனால் மேலும் விசாரணையைத் தொடர்ந்த போலீஸார், அவர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த மருத்துவமனை சிசிடிவி வீடியோக்களை பார்த்ததில், முதலில் கம்லேஷ் மற்றும் அஷோக் வீட்டிற்குள் சென்றபிறகு, சிறிதுநேரம் கழித்து சிறுவனும் வீட்டிற்குள் சென்றுள்ளான். உள்ளே சென்ற சிறுவன் திரும்ப வெளியே வராததால், கம்லேஷ் மற்றும் அஷோக்கை கடுமையாக விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். குழந்தையை கொலைசெய்த குற்றத்திற்காக இந்திய சட்டப்பிரிவு 302இன் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement