ராம ஜென்மபூமி அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து 6 இலட்சம் திருட்டு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போலி காசோலையைப் பயன்படுத்தி, ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து 6 இலட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து, போலி செக் மூலமாக சுமார் ஆறு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள இரண்டு வங்கிகளிடமிருந்து போலி காசோலையைப் பயன்படுத்தி இந்த தொகை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

மோசடி செய்தவர்கள் மூன்றாவது முறையாக போலி காசோலை மூலமாக பணம் பெற முயன்றபோது மோசடி கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய்க்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அயோத்தி காவல்துறை, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி லக்னோவில் உள்ள வங்கியில் இருந்து ரூபாய் 1.5 லட்சம் பணம், போலி காசோலை மூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ரூபாய் 3.5 லட்சம் இதுபோல பெறப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக, லக்னோவில் உள்ள பாங்க் ஆப் பரோடாவிலிருந்து ரூபாய் 9.86 லட்ச ரூபாய் காசோலை மூலமாக பணம் பெற முயன்றபோது, இந்தமோசடி நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தது.

அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் காணவில்லை என்பதை உறுதிசெய்து இந்த விஷயத்தை அயோத்தி போலீசில் தெரிவித்தார். ரூபாய் 1.5 லட்சம் போலி காசோலையும், ரூபாய் 3.5 லட்சம் மோசடி காசோலையும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தகவல் அளித்ததாக வட்ட அலுவலர் ராஜேஷ் ராய் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement