‘‘மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து வெளியேற ரூ.6,000 கோடி செலுத்த வேண்டும்” - லா லிகா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆறுமுறை பாலன் டி ஓர் விருதை வென்ற உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி ‘பார்சிலோனா’ கால்பந்தாட்ட கிளப் அணியை விட்டு விலக முடிவு  செய்து தனது முடிவை கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார். 


Advertisement

image

இருப்பினும் பார்சிலோனா அணியோடு அவர் ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தத்தினால் அவரது முடிவுக்கு சட்ட ரீதியாக சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. 


Advertisement

அதேபோல மெஸ்ஸியின் கோரிக்கையை ஏற்க மறுத்து அணியிலிருந்து விடுவிக்க பார்சிலோனா மறுத்துவிட்டதால், கொரோன சூழலை சுட்டிக்காட்டிய மெஸ்ஸியின் வாதம் தற்போது தோல்வியடைந்துள்ளது.

image

‘மெஸ்ஸியை தங்கள் கிளப்பில் ஒப்பந்தம் செய்ய விரும்பும் கால்பந்தாட்ட அணி 6000 கோடி ரூபாயை பார்சிலோனாவுக்கு செலுத்தி வெளியீட்டு விதியை பூர்த்தி செய்தால் மட்டுமே மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேற முடியும்’ என இன்று தெரிவித்துள்ளது லா லிகா கால்பந்து தொடரின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Advertisement

மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய விரும்பும் மேன்செஸ்டர் அணி பார்சிலோனாவின் முடிவுக்காக காத்திருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement