குடும்பத்தகராறு முற்றியதால் கணவனை தலையில் அடித்துக்கொன்று, படுக்கையறையின் தளத்திலேயே குழிதோண்டி புதைத்த 21 வயது பெண்ணின் செயல் திரிபுராவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தலாய் மாவட்டத்தின் காந்தசெரா கிராமம். வியாழக்கிழமை அன்று 30 வயதான சஞ்சித் ரீங் என்பவரை அவரது மனைவி பாரதி ரீங் கொலை செய்ததாக காவல்துறை கூறுகிறது, இப்போது பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். “நாங்கள் அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆன்லைன் முறை மூலம் காவலில் எடுத்தோம். எங்கள் ஆரம்ப விசாரணையின்படி, தம்பதியினருக்கு நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்தது. சம்பவம் நடந்த நாளில் அவர்களின் சண்டை முற்றியது, இதனால் அவர் தனது கணவரைத் தலையில் அடித்து படுக்கையறைத் தளத்தின் கீழ் புதைத்தார் ”என்று காந்தசெரா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அந்தபெண் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், கந்தசெரா காவல்துறை சஞ்சித்ரீங்கின் உடலை அவரது வீட்டின் படுக்கையறையின் மண் தரையின் கீழ் கண்டறிந்தது. பாதிக்கப்பட்டவரின் தலையில் ஆழமான வெட்டு மற்றும் காயம் குறித்த அடையாளங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் கணவனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியிருக்கலாம் என்று அவர்கள் கூறினர். ஏழுவயது குழந்தைக்கு தாயான பாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் தற்போது அவர் கோவிட் 19 தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை