குட்கா விவகாரம்:திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்ததாக திமுக எம்எல்ஏக்கள் மீதான சட்டசபை உரிமை குழு நோட்டீஸின் ஒருபகுதியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக திமுக எம்எல்ஏக்களுக்கு, சபாநாயகரால் வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பான், குட்கா, உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்பதை நிரூபிக்க திமுகவினர் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபைக்கு அப்பொருட்களை கொண்டு வந்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது உரிமை மீறல் பிரச்சினையை அதிமுக கொண்டு வந்தது. திமுகவின் செயலை கண்டித்த சபாநாயகர் தனபால், இந்த விவகாரத்தை சட்டசபை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைத்தார்.


Advertisement

இதை விசாரித்த சட்டசபை உரிமைக் குழு 21 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

loading...
Related Tags : குட்கா

Advertisement

Advertisement

Advertisement