JUST IN

Advertisement

டிரைவருடன் தொடர்பு... தொழிலதிபரை கொலை செய்த மனைவி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் தொழிலதிபர் கொலை வழக்கில், 22 நாட்களுக்குப் பின்னர் தொழிலதிபரின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் குற்றவாளியை மறைத்ததில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement

கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் ஜோதிநகரைச் சேர்தவர்  உதயபாலன். தொழில் அதிபரான இவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவரது மனைவி உதயலேகா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரது தந்தைகளும் நண்பர்கள். இதனால் , தங்கள் குழந்தைகளை மணவாழ்க்கையில் இணைத்து பிரிக்க முடியாத உறவாக மாற நினைத்தனர். அதற்காகவே மகனுக்கு உதயபாலன் என்றும், மகளுக்கு உதயலேகா என்றும் பெயர் வைத்து அவர்கள் வளர்ந்ததும் மணம் முடித்து வைத்தனர். 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் புயல் வீசத்தொடங்கிய நிலையில்தான் சென்னை கிண்டி ஜோதி நகரைச் சேர்ந்த உதயபாலன் கடந்த 4 ஆம் தேதி தனது வீட்டு படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 

மனைவி உதயலேகா தனது 3 பெண் குழந்தைகளுடன் காரைக்கால் சென்ற நிலையில் இந்த கொலை நடந்துள்ளது. இந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆதாரத்தை அழிக்க வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமிராக்களில் தண்ணீர் ஊற்றியதும் தெரியவந்தது. 


Advertisement

இந்த நிலையில் மகன் கொலையில் சந்தேகம் நீடிப்பதாக தந்தை சதாசிவம் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததையடுத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. 

விசாரணையில், உதயபாலன் கொலையில், அவரது மனைவி உதயலேகாவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உதயலேகா காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில்,. ‘நான் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனது கணவரின் தந்தையும், எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். எங்களின் இருவரின் குடும்பத்தினரும் காரைக்காலில் வசித்தனர்.

எனது தந்தையும், கணவரின் தந்தையும் பேசி எங்களது திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தேன். இனிதாக நடந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் கால் டாக்சி டிரைவர் பிரபாகரன் ரூபத்தில் புயல் வீசியது. பிரபாகரனும் காரைக்காலை சேர்ந்தவர்.
எனது கணவர் ஜாக்குவார் கார் வைத்திருந்தார். எனது கணவர் காரில் வெளியே போகும் சமயத்தில் பிரபாகரனின் கால் டாக்சியில் நான் வெளியில் தனியாக செல்வேன். எங்கள் ஊரை சேர்ந்தவர் என்பதால் பிரபாகரன் என்னோடு அன்பாக பழகினார். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் தனது குடும்பத்தோடு வறுமையில் வாடுவதாக வருத்தப்படுவார். நான் அவருக்கு பண உதவி செய்துள்ளேன். அவர் என் மீது ஆசைப்பட்டார். என்னை வைத்து அவர் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.


Advertisement

பிரபாகரன் வீட்டுக்கு வந்து செல்வது எனது கணவர் உதயபாலனுக்கு பிடிக்கவில்லை. என் மீது சந்தேகப்பட்டார். என்னை அடிக்கடி திட்டினார். என்னை விவாகரத்து செய்யப் போவதாக மிரட்டினார். இதனால் எங்கள் வீட்டில் சந்தோஷம் தொலைந்து போனது. தினமும் மனக்கஷ்டத்தால் அவதிப்பட்டேன். பிரபாகரனை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர் வீட்டுக்கு தொடர்ந்து வந்தார். எனது கணவர் திட்டியதால் புண்பட்ட எனது மனதுக்கு ஆறுதலாக பேசுவார்.

எனது கணவரை கொலை செய்துவிடலாம் என்று பிரபாகரன் கூறினார். ஆனால் அவரது கொலை திட்டத்தை நான் ஏற்கவில்லை. எனது மனக்கஷ்டத்தை பிரபாகரன் அவருக்கு சாதகமாக பயன்படுத்தினார். எனது கணவரை கொலை செய்யப்போவதாக மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். நான் எனது குழந்தைகளோடு காரைக்காலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டேன்.

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது கணவர் தனியாக இருந்ததை பயன்படுத்தி அவரை பிரபாகரன் தீர்த்துக்கட்டி விட்டார். அவரை கொலை செய்துவிட்டதாக எனக்கு செல்போனிலும் பேசி தகவல் கொடுத்தார். ஒரு பக்கம் வெறுப்பு இருந்தாலும், எனது கணவர் கொலை செய்யப்பட்டதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனக்கும் தெரிந்து தான் கொலை நடந்தது என்ற உண்மையை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர் என அவர்  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொலை நடந்த 22 நாட்களுக்குப்பிறகு உதயலேகா கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கின் முக்கிய குற்றவாளியான உதயலேகாவை கைது செய்யாமல், அவர் முதல் குற்றவாளி என்பதை கிண்டி காவல்துறையினர் மூடி மறைத்தது தெரியவந்துள்ளது. கொலையாளியை கைது செய்யாமல் மறைத்த கிண்டி காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். 


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement