''பாக்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்த'' - ஓட்டத்தை தொடங்கிய இம்ரான் தாஹீர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் 2020, அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. இதற்காக எல்லா அணியினரும் ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றனர்.
அண்மையில் பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே அணியினர் நேற்று துபாய் சென்றடைந்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட 16 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என 51 நபர்கள் தனி விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.


Advertisement

image

இந்நிலையில் மற்ற வெளிநாட்டு வீரர்களும் தங்கள் நாடுகளில் இருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் வந்துவிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் இம்ரான் தாஹீர் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளார். அந்த தகவலை தனக்கே உரித்தான ட்விட் மூலம் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''என் இனிய தமிழ் மக்களே. உங்கள் நலம் நலமறிய ஆவல். பலமுறை வந்தோம், வென்றோம், சென்றோம். இம்முறை வருகிறோம். வெல்வோம், செல்வோம். உங்கள் நல்லாசிகளோடு. பாக்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்த.. எடுடா வண்டிய.. போடுடா விசில'' என தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement