[X] Close

”உலகமே தமிழரின் சித்த மருத்துவத்தைக் கண்டு வியக்கிறது”: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழரின் மருத்துவமான சித்தாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


Advertisement

’சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. போலி மருத்துவர் திருதணிகாச்சலத்தின் வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, அதில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயூர்வேதா துறைக்கு 3000 கோடி ரூபாயும், சித்த மருத்துவத் துறைக்கு 437 கோடி ரூபாயும் ஒத்துக்கியுள்ளதாக தெரிவித்தது. இதனால், அதிருப்தியடைந்த நீதிபதிகள் ‘பிற மருத்துவத்துறையை விட சித்த மருத்துவத்துறைக்கு மட்டும் குறைவான நிதி ஒதுக்கப்படுவது துரதிஷ்டவசமானது. ஆயுஷ் அமைச்சகத்தில் ஆயூஷில் வரும் எஸ் என்ற எழுத்தை நீக்கிவிடலாம் என்று கண்டம் தெரிவித்திருந்தார்கள்.  இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து பேசினோம்,

 


Advertisement

image

     “சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உலகிற்கே உணர்த்தியவர்கள் நம் தமிழர்கள்தான். அது தமிழர்களின் பெருமை. ஆங்கில மருத்துவம் இல்லாத காலத்திலிருந்தே சித்த மருத்துவம் தொன்றுதொட்டு வருகிறது. அப்போதெல்லாம், மக்களை சித்த மருத்துவம்தான் பல்வேறு நோய்களிலிருந்து குணப்படுத்தியது. உதாரணமாக, டெங்குவிற்கு ஆங்கில மருத்துவத்திலேயே மருந்து இல்லை. சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீர்தான் கொடுக்கப்பட்டு மக்கள் குணமானார்கள். அப்படியொரு சிறப்பு வாய்ந்தது சித்த மருத்துவம்.

அதோடு, முன்பைவிட சித்த மருத்துவத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கை உணவுகள், சித்த மருத்துவம் என்று மீண்டும் பாரம்பரியத்திற்கு திரும்பியுள்ளார்கள். கொரோனாவே சித்த மருத்துவத்தால் குணமாகிறது என்று குணமடைந்தவர்களே பேட்டிக் கொடுப்பதை நாம் கண்ணால் காண்கிறோம். எல்லோருமே சொல்கிறார்கள். உலகமே தமிழரின் சித்த மருத்துவத்தைக் கண்டு வியக்கிறது.


Advertisement

image

அதேபோல, கொரோனா வந்தவுடனேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் தமிழகம் முழுக்க விநியோகிக்கப்பட்டும் வருகிறது. இப்படியொரு சூழலில் சித்த மருத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பது காலத்தின் கட்டாயம். அதனால்தான், மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று மத்திய அரசு சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

மேலும், சித்த மருத்துவத்துறை என்றில்லை எல்லா துறைகளுக்கும் தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அப்படிக் கொடுப்பதுதான் மாநில சுயாட்சிக்கே அர்த்தமாக இருக்கும். இந்தியாவின் கூட்டமைப்பில் இருக்கிறோம். அதனால், எல்லோரையும் மத்திய அரசு சரிசமமாகத்தான் பார்க்கவேண்டும்” என்று அக்கறையுடன் பேசும் அமைச்சர் ஜெயக்குமாரிடம், இ.பி.எஸ்- ஒ.பி.எஸ் அணிகள் இதே ஆகஸ்ட் 21 ஆம் தேதிதான் இணைந்தார்கள். ஆனால், தலைமையில் அதே மோதல் பிரச்சனை சமீபத்திலும் வந்திருக்கிறதே?

 

image

எங்களுக்கு ஒரே கருத்துதான். முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் 100 ஆண்டுகளுக்குமேல் ஆலமரம்போல் தழைத்து நிற்கும். ஆலமரம் எல்லோருக்கும் நிழல் தரக்கூடிய நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. அப்படித்தான், அதிமுக அரசும் நிலைத்து நிற்கும். எப்போதும்போல சிறப்பான ஆட்சியை வழங்கும்.

- வினி சர்பனா

loading...

Advertisement

Advertisement

Advertisement