சென்னையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் - தமிழக அரசு

TASMAC-liquor-SHOPS-to-open-in-Chennai-from-August-18-Government-of-Tamil-Nadu

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைககளை கடந்த மே 7ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. 


Advertisement

image

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் வரும் 18ஆம் தேதி முதல் இயங்கும். 


Advertisement

image

மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement