[X] Close >

‘உதவித்தொகைப்பெற நகைகள் இல்லாமல் புகைப்படம்’ மதுரை மூதாட்டிகளிடம் நூதன முறையில் திருட்டு

Claiming-to-get-scholarships-from-grandmothers-in-Madurai-7-Shaving-jewelry-theft---case-filed-and-police-investigation-

மதுரையில் மூதாட்டிகளிடம் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி 7 சவரன் நகை திருட்டு - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை. 


Advertisement

image

மதுரை குருவிக்காரன் சாலை பகுதியை சேர்ந்த 71 வயது மூதாட்டி தங்கம், மற்றும் மதுரை சிந்தாமணி தியேட்டர் பகுதியை சேர்ந்த 68 வயது மூதாட்டி பரிபூரணம். இவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முதியோர் உதவித் தொகையை எளிமையான முறையில் பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர்.


Advertisement

உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க கழுத்தில் நகைகள் இல்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி மூதாட்டி தங்கம் அணிந்திருந்த ஐந்து பவுன் நகை, மற்றும் மூதாட்டி பரிபூரணம் அணிந்திருந்த இரண்டு பவுன் நகையையும் வாங்கி பையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இது குறித்து மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் மூதாட்டிகள் இருவரும் அளித்த புகாரின் பேரில் நகைகளை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags : மதுரைMadurai
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close