2 ஆண்டுகளாக பூட்டி கிடந்த வீட்டின் முன்பு கொரோனா தடுப்பு மெட்டல் ஷீட்.. ஷாக் ஆன பொதுமக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி இருந்த வீட்டில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வீட்டின் முன்பகுதியில் காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் மெட்டல் ஷீட் தடுப்பு அமைத்துள்ளனர்.


Advertisement

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே உள்ள பல்லவன் நகரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஒரு வீட்டின் முன்பகுதியில் நகராட்சி ஊழியர்கள் மெட்டல் ஷீட் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும் இங்கு யாரும் வசிக்காத வீட்டில் வெப்பநிலை பரிசோதனை செய்ததாக நகராட்சி தற்காலிக ஊழியர்கள் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.


Advertisement

சம்பந்தப்பட்ட வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வேறு ஒரு பகுதியில் வசிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக யாருமே இல்லாத வீட்டினில் காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த தனிமைப்படுத்தப்படும் ஒரு வீட்டிற்கு மட்டும் மெட்டல் ஷீட் அடிக்க 14 நாட்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

image
யாருமே வசிக்காத வீட்டிற்கு மெட்டல் ஷீட் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் பணிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

 பணிக்கு சென்றால் மட்டுமே ஊதியம் என்கின்ற நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள் ஏற்கனவே வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் நகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக பலரும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image
இதுகுறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரி இடம் கேட்டபோது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட வீட்டில்தான் வசித்து வருகிறார் என்பதனை கள ஆய்வு செய்த பிறகே அவ்வீட்டில் மெட்டல் சீட் வைத்தோம். மேலும் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்த பிறகு தனிமைப் படுத்திக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வர இருக்கிறார் சம்பந்தப்பட்ட நோயாளி அப்பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் இதுமாதிரியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement