தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த மாவட்டங்களின் விவரம்:
தேவலா (நீலகிரி) 4செ.மீ,
சின்னக்கல்லார் (கோவை) 4 செ.மீ,
வால்பாறை வட்டாச்சியர் அலுவலகம் (கோவை) 3 செ.மீ,
வால்பாறை (கோவை) 3 செ.மீ,
பரம்பிக்குளம் (கோவை) 3 செ.மீ,
சோலையார் (கோவை) 2 செ.மீ,
சின்கோனா (கோவை) 2 செ.மீ,
அவலாஞ்சி (நீலகிரி) 2செ.மீ,
தக்கலை (கன்னியாகுமரி) 1 செ.மீ,
பெரியாறு (தேனி) 1 செ.மீ,
மேல் பவானி (நீலகிரி) 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 15 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Loading More post
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’