வயிற்றில் நீர்கட்டி என மகள் சொன்னதை நம்பிய பெற்றோர்.. மருத்துவரிடம் சென்ற போது அதிர்ச்சி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் பிடித்தனர்.


Advertisement

சென்னை மதுரவாயலை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கு இன்று வயிற்று வலி ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரசவவலி ஏற்பட்டு இருப்பதாகவும், குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கேட்டவுடன் அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதையடுத்து அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரவாயல் ஆய்வாளர் ரவீந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார்.

image


Advertisement

இதில் குழந்தைக்கு காரணம் புழல் பகுதியை சேர்ந்த லோகேஷ் (24) என்பது தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் லோகேஷ் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி உள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் மதுரவாயல் வழியாக அவர் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகியுள்ளது. அப்போது அந்த பெண்ணின் வீட்டின் அருகே நின்று தண்ணீர் கேட்டுள்ளார். பெண் அழகாக இருந்ததால் தன்னிடம் பேசுமாறு கூறி தனது செல்போன் நம்பரை துண்டு சீட்டில் எழுதி வீசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண் பேசாமல் இருந்துள்ளார்.

image

இதனால் விரக்தி அடைந்த லோகேஷ், ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்து அந்தப் பெண்ணிடம் வந்து பேசியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண்ணை வெளியே அழைத்துச் சென்று பழகியுள்ளார். பின்னர் அப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பெண் கர்ப்பம் ஆகியுள்ளார். லோகேஷிடம் கர்ப்பான அப்பெண் கூற, கர்ப்பத்தை கலைத்து விடுமாறு அவர் கூறி உள்ளார். இதனை வீட்டில் தெரிவிக்காமல் இருந்த அப்பெண், வயிற்றில் நீர்கட்டி இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.


Advertisement

கொரோனாவுக்கு 4 மாத குழந்தை மரணம் : திருவாரூரில் சோக சம்பவம்

loading...

Advertisement

Advertisement

Advertisement