இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமான குமார் சங்கக்கரா தனது பேவரைட் பேட்ஸ்மேன்கள் யார் என்பதை தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் பட்டியலில், இலங்கை மற்றும் இந்திய வீரர்களின் பெயர்கள் ஒன்றுக்கூட இடம்பிடிக்கவில்லை. மாறாக,மேற்கிந்திய அணிகளின் முன்னாள் அதிரடி வீரர்கள் இருவரின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார்.
தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக உள்ள சங்கக்கரா எம்.சி.சியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்வி பதிலுக்கு பதிலளிக்கும்போது ’எல்லா நேரத்திலும் உங்களுக்கு பிடித்தமான பேட்ஸ்மேன்கள் யார்?’ என்ற ரசிகரின் கேள்விக்கு, ’மேற்கிந்திய அணியில் போற்றக்கூடிய அதிக ரசிகர்களைக் கொண்ட சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா ஆகிய இருவரும்தான் எனது பேட்டிங் ஹீரோக்கள். கிரிக்கெட்டை எனது தொழிலாக எடுத்துக்கொள்ளத் தூண்டியது அவர்களின் விளையாட்டுகள்தான்” என்று பாராட்டியுள்ளார்.
சங்ககாரா கேப்டனாக இருந்தபோது இலங்கை அணியை பலதடவை உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் அழைத்துச் சென்றார். இதே சங்கக்கராதான் ஐ.சி.சி தலைவர் பதவிக்கு கங்குலியை நிறுத்தவேண்டும் என்றும் ஆதரவு குரல் கொடுத்தவர்.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!