கொடைக்கானலில் தொடர் சாரல் மழை.. ஆர்ப்பரித்துக் கொட்டும் புலவிச்சாறு அருவி!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் பெய்யும் தொடர் சாரல் மழையால் ஆர்ப்பரித்துக் கொட்டும் புலவிச்சாறு அருவி.


Advertisement

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியான போளூர் கிராமத்தில் இயற்கை எழில்கொஞ்சும் புலவிச்சாறு அருவி உள்ளது. கடந்த சில வாரங்களாக கேரளாவை ஒட்டியுள்ள மேல்மலைப் பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்துவருவதால், புலவிச்சாறு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


Advertisement

image
அழகான பள்ளத்தாக்கின் நடுவே மனதை அள்ளும் கொள்ளை அழகோடு ஆர்ப்பரித்துக் கொட்டி கொடைக்கானலின் அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

image
பொது முடக்கம் முடிந்து, மீண்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் போது இந்த அருவியையும் சுற்றுலா பட்டியலில் இணைக்க வேண்டும். புதுப்பொழிவுடன் கூடிய புதிய இடங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டுகழிக்க எற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement