கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு - 8 மாதத்தில் 17 யானைகள் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை சிறுவாணி மலையடிவாரத்தில் கடந்த 3 நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த பெண் யானை உயிரிழந்தது.


Advertisement

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சிறுவாணி மலை அடிவாரம் சாடிவயல் அடுத்த சர்க்கார்போரத்தி பழங்குடியினர் கிராமம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு கடந்த 8ஆம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

image
15 வயதுடைய அந்த பெண் யானை நீண்ட நாட்களாக உணவருந்தாமல் மெலிந்து, சோர்வினால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், யானை படுத்து இருந்த இடத்தை சுற்றிலும் உருண்டுகொண்டிருந்ததால் வயிற்று வலியால் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.


Advertisement

இந்நிலையில், கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த யானை உயிரிழந்தது. கடந்த 8 மாதங்களில் இதுவரை 17 யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது என்பது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement