மதுரை: 11 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு 6 லட்சமா?: வைரலாகும் மருத்துவமனை பில்லால் அதிர்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் 11 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 6 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது.


Advertisement

image
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை அதற்கான தடுப்பு மருந்தோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப் படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சில தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் பணத்தை வாரி சுருட்டுவதாக கூறப்படுகிறது.கொரோனாவின் விபரீதம் உயிரிழப்பு என்பதால் நோயாளிகளும் தேவையான பணத்தை தயக்கமின்றி கொடுத்துவருவதால் மருத்துவமனைக்கு வரும் அனைத்துவித நோயாளிகளிடமும் கட்டணத்தை கறந்துவிடுகின்றனர் என சொல்லப்படுகிறது.

image
கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதுரை பைக்காரா பகுதியில் உள்ள பிரபல (லெட்சுமணா) தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு நேமிசந்த் என்பவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் 14ஆம் தேதி தொற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.


Advertisement

அப்போது நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட டிஸ்சார்ஜ் பில் நோயாளியின் உறவினர்களை தலைசுற்ற வைத்ததுள்ளது. கொடுக்கப்பட்ட பில்லில் பதிவு கட்டணமாக 2ஆயிரம் என தொடங்கி அறை வாடகை நாளொன்றுக்கு தலா 5ஆயிரம் வீதம் 12நாட்களுக்கு 60ஆயிரமும், 300 ரூபாய் மதிப்புள்ள பிபிஇ கிட் ஒன்றிக்கு தலா 2ஆயிரம் என 96 கிட் பயன்படுத்தியதாக 1லட்சத்தி 92ஆயிரம் ரூபாயும், இதில் இன்னும் கூடுதலாக இன்வெஸ்டிகேஷன் சார்ஜஸ் என தனியாக 24ஆயிரம் ரூபாயும், மருந்து மாத்திரைகளுக்கான செலவாக 78ஆயிரமும், ஹவுஸ்கீப்பிங்கிற்கு 42ஆயிரம் என ஒட்டுமொத்தமாக 6லட்சத்தி 3 ஆயிரத்தி 500 ரூபாய் வசூல் செய்துள்ளனர்.

image
இந்த பில் தற்போது சமூகவலை தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  மருந்தே கண்டறியாத கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதாக நாளொன்றுக்கு 50ஆயிரம் என 6லட்சம் வசூல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement