[X] Close

3 பேரை அரிவாளால் வெட்டியவர் கைது - மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராசிபுரம் அருகே இளைஞர் ஒருவர் 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாளப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் சிறைக்கு சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்குள் வந்ததாக தெரிகிறது.

image


Advertisement

இந்நிலையில் அவர் திடீரேன அவரது பாட்டி லட்சுமி, பெரியப்பா பெரியண்ணன் மற்றும் ராசிபுரத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் உட்பட 3 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை பிடிக்க முற்பட்டனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த கோடிஸ்வரன் வெளியே வரவில்லை.

image

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் பதுங்கியிருந்த கோடிஸ்வரனை மயக்க ஸ்பிரே அடித்து 3 மணிநேரம் போராடி கைது செய்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement