இதுவரை இல்லாத அளவு... - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு..!

Coronavirus-updates-With-over-62k-cases--India---s-Covid-count-crosses-2-million

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 62,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் தகவல்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே நாளில் இந்தியாவில் 62,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 886 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2.07% ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 67.62% ஆகவும் உள்ளது.

image


Advertisement

மேலும், இந்தியாவில் இதுவரை 2.27 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மொத்தம்  20,23,821 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement