எச்.டி.எப்.சி வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனியார் வங்கியான எச்.டி.எப்.சி வங்கியின் தற்போதையை தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஆதித்யா பூரி அடுத்த சில மாதங்களில் தனது பணியில் இருந்து ஒய்வு பெற உள்ள சூழலில் அவருக்கு  அடுத்ததாக அந்த வங்கியின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக சஷிதர் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

image

சஷிதர் ஜகதீஷனை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.


Advertisement

"அந்த பணியை திறம்பட செய்வதற்கான திறம் ஜகதீஷனிடம் உள்ளன. அவரது நியமனம் எச்.டி.எப்.சி வங்கியின் எதிர்கால செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் தற்போது அந்த பதவியில் உள்ள ஆதித்யா பூரி.

கடந்த 25 ஆண்டுகளாக சஷிதர் ஜெகதீசன் எச்.டி.எப்.சி வங்கியில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement