தமிழகத்தில் மருத்துவக் குழு ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. பிற மாவட்டங்களிலும் தொற்றுகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. மருத்துவமனைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்து கொடுத்து வருகிறோம். அதிக பரிசோதனை செய்துவரும் மாநிலம் தமிழ்நாடு தான். மருத்துவ குழு ஆலோசனை படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ குழு ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொற்றுக்கு ஆளானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. " எனத் தெரிவித்தார்.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்