கோவையில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்துக் கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி இல்லம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பூக்களால் வேல் வரைந்தும், பெண்கள் தங்களது கைகளில் வேல் வரைந்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் முருகன் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடியும், வெற்றிவேல் வீரவேல் என்றும் முழக்கமிட்டனர். அதுமட்டுமின்றி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மாநில இளைஞரணியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் வேல் வரைந்து உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!