இரண்டு வேறுபட்ட ஸ்டோரேஜ் வசதி: ஆகஸ்ட் 3ஆம் தேதி களமிறங்குகிறது விவோ எஸ்7

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆகஸ்ட் 3ஆம் தேதி விவோ எஸ் 7 சீனாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிறுவனம் நேர்த்தியான புதிய மாடலின் டீஸர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


Advertisement

எஸ் வரிசையின் கீழ் வெளியிட இருக்கும் போன்களின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் முன்னதாகவே வெளிவந்துள்ளன. இரண்டு செல்ஃபி கேமிராக்களையும், மூன்று பின்புற கேமிராக்களையும் கொண்ட அமைப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டோரேஜ் வசதியைப் பொறுத்து விலைகள் நியமிக்கப்பட்டுள்ளன.

image


Advertisement

சீனாவில் வெய்போ நிறுவனத்தின்மூலம் வெளியிடப்பட்ட இந்த டீஸர் வீடியோவில் விவோ எஸ்7 வெளியிடும் தேதி மற்றும் விலைகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தவிர இந்த சாதனம் குறித்த வேறு தகவல்கள் அதிகம் வெளிவரவில்லை.

வரவிருக்கும் இந்த மொபைல் விலை பற்றிய விவரங்களை சீனாவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய விலையில் 128ஜிபி தோராயமாக ரூ.32,100 இருக்கும் எனவும், 256ஜிபி தோராயமாக ரூ. 35,300 இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement