இந்த பிணம் செல்ல பாதை எங்கே? சாலையில் வைத்து போராடிய மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிணத்தை கொண்டுசெல்ல வழிகேட்டு கிராமமக்கள் போராட்டம்


Advertisement

நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுகா படலையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு கிராமத்தில் வசிக்கும் மக்கள் அருகே உள்ள பொது இடத்தில் காலங்காலமாக இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளை மேற்கொண்டு வந்தனர்.

image


Advertisement

image 1

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்து இருப்பதாக அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இன்று செட்டிமேடு கிராமத்தில் ஆறுமுகம் என்ற முதியவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய வழி இல்லாமல் போனதால் நடு வழியில் பிணத்தை இறக்கி வைத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


Advertisement

image

image 2
இதைஅறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் பிரதிக் தயாளன், நான்குநேரி டி.எஸ்.பி ஸ்ரீலிசா ஸ்டெபெல்லா ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு தற்காலிகமாக ஒரு பாதை ஏற்படுத்தி தருவதாகவும் அதன் வழியாக பிணத்தை கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுரைக் கூறினர். பின்னர் நிரந்தர பாதை அமைத்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தனர். இதனை அடுத்து ஊர்மக்கள் போராட்டதை கைவிட்டு பிணத்தை எடுத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement