"நாங்க வருமான வரித்துறையிலிருந்து வரோம் ”: மோசடி கும்பலை நாசுக்காக சிக்கவைத்த கடைக்காரர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் வணிக வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, பணம் வாங்க முயற்சி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

 

image


Advertisement

மதுரை வண்டியூர் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ ராஜா. இவர் கடந்த ஒரு வருடமாக ஆண்டாள் கொட்டாரம் பகுதியில் நெய் உள்ளிட்ட பொருள்களை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று இவரது கடைக்கு வந்த மூன்று நபர்கள் தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்து ராஜாவிடம் பணம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ராஜா பணம் தர மறுத்ததாகத் தெரிகிறது. இருப்பினும் அதிகாரிகள் அங்கிருந்து செல்லாமல் கடையிலேயே நின்று கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த கேசவ ராஜா, அவர்களை அங்கேயே அமர வைத்து விட்டு, கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகள் என்று சொல்லிக் கொண்டு வந்த மூவரில் இருவர் முத்துக்குமார் மற்றும் அசோக்குமார் என்பதும், இவர்கள் இருவரும் வருமான வரித்துறையில் பணி செய்து ஓய்வு பெற்றதும் தெரியவந்தது.

image
மேலும் இவர்களுடன் மூன்றாவதாக வந்தவர் அவர்களது நண்பர் சந்தானம் என்பதும் அவர்கள் பழைய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் காவலர்கள் கைது செய்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement