தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து வனத்துறையினர் விசாரணையின்போது உயிரிழந்தது குறித்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான் ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது. அதுவும் காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் வேளாண்மை நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் துயரமாகும். இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.
வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு பேரிடர் இழப்பாகக் கருதி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தபோதிலும், அது செவிடர் காதில் ஓதிய சங்காகவே உள்ளது.
மலையடிவார விவசாயிகளின் வேதனையைச் சொல்லி மாளாது. இத்தகையச் சூழ்நிலையில் விவசாயி அணைக்கரை முத்து தமது வேளாண் பயிர்களைப் பாதுகாக்க மின்வேலி அமைத்துள்ளது மாபாதகச் செயல் அல்ல. அதனால் எவருக்கும் உயிர் இழப்பு ஏற்படப்போவதும் இல்லை. அதைத் தவிர மலையடிவார விவசாயிகளுக்கு தங்கள் வேளாண்மையைப் பாதுகாக்க வேறு வழி இல்லை.
இதற்காக நள்ளிரவு 11 மணிக்கு வீடு புகுந்து, விவசாயி அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் அவசர அவசியம் வனத்துறைக்கு ஏன் வந்தது? தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் தகவலைக் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காதது ஏன்?
சுமார் 75 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த விவசாயியை வனத்துறையினர் கடுமையாகத் தாக்கியதன் விளைவாகவே அவர் இறந்துவிட்டார் என அவரது குடும்பத்தினரும், அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கடந்த மூன்று நாட்களாகக் குரல் எழுப்பி வருகின்றனர். கடையம் வாகைக்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
வனத்துறையினர் தாக்கியதன் விளைவாகவே விவசாயி அணைக்கரை முத்து இறந்திருக்கிறார் என்பது சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும்.
நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவக் குழுவினரால் விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்வதுடன், அதனை ஒளிப்படம் எடுத்திட வேண்டும். பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்.
வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை அநியாயமாக இழந்துவிட்ட அக்குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்