சுகமானோ, ஷாட் கொல்லாமோ, கழிச்சோ- இது விஷால் மலையாளம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஷால் மலையாளத்தில் நடித்து வரும் ’வில்லன்’. மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஷால். 
இதுபற்றி அவர் கூறும்போது, ’ மோகன்லால் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தப் படம் மூலம் அது நனவாகி இருக்கிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து நடிக்கிறேன். நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இப்போது இதில் நடிக்கிறேன். இந்தப் படத்தின் கான்செப்ட் பிடித்திருக்கிறது. இதன் படப்பிடிப்பில், எனது வசனங்களை, மலையாளத்தில் நானே பேசுகிறேன். எனக்கு மலையாளம் தெரியாது என்றாலும் அதன் தமிழ் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பேசுகிறேன். மலையாளம் கற்க மோகன்லால் உதவி வருகிறார். அவரிடம் ’சுகமானோ’  என்று கேட்கிறேன். இயக்குனர் உண்ணி கிருஷ்ணனிடம், ‘ஷாட் கொள்ளாமோ?’ என்று கேட்கிறேன். ’கழிச்சோ’, ’காணாம்’ என்பது நான் கற்ற மற்ற மலையாள வார்த்தைகள். இன்னும் சில வார்த்தைகளைக் கற்றிருக்கிறேன். மஞ்சு வாரியர் நடிப்புக்கு நான் ரசிகன். இந்தப் படத்தில் அவரும் நடிக்கிறார். அவருக்கும் எனக்குமான காம்பினேஷன் காட்சிகள் அதிகம் இல்லை. இருந்தாலும் மோகன்லால், மஞ்சு வாரியர் ஆகியோர் பெயருடன் என் பெயரையும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement