தீப்பற்றிய குடியிருப்பு.. 40 அடி உயரத்திலிருந்து குதித்த சிறுவர்கள்: வைரல் வீடியோ..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து தப்பிக்க மேலே இருந்து குதித்த சிறுவர்களை அங்குள்ள மக்கள் எந்த சேதமும் இல்லாமல் காப்பாற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

பிரான்ஸ் நாட்டில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயங்கரமான புகை வெளிப்பட்டது. அந்த வீட்டின் ஜன்னல் வழியாக 3 வயது மற்றும் 10 வயது சிறுவர்கள் கூச்சல் போட்டுள்ளனர். வீட்டின் கதவைத் திறந்து வெளியே வருமாறு அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். பெற்றோர் குழ்ந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டியிருந்தது அப்போதுதான் தெரியவந்தது.

எனவே அங்கிருந்த மக்கள் 40 அடி உயரத்திலிருந்து அவர்களைக் கீழே குதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். முதலில் 3 வயது சிறுவனை எந்த அடியும் படாமல் பத்திரமாகப் பிடித்துள்ளனர். பிறகு 10 வயது சிறுவனையும் குதிக்கச்சொல்லி காப்பாற்றி விட்டனர். அவர்களுக்கு புகையால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் தவிற வேறு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.


Advertisement

இதில் அங்கிருந்த 25 வயது வாலிபருக்கு கை முறிவு ஏற்பட்டது. இதுபற்றி அந்த வாலிபர் கூறுகையில், ’’அலறல் சத்தம் கேட்டுதான் நான் அங்கு வந்தேன். மூன்றாவது மாடியிலிருந்து பயங்கரமான புகை வந்துகொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள் ஜன்னல் வழியாகக் காப்பாற்றும்படி அழுதுகொண்டிருந்தனர்.’’ என தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை எதிர்வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்திருந்தார். தீவிபத்து ஏற்பட்டது பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement