புதிய முதலீடுகளால் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்காது: பொருளாதார நிபுணர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் புதிய தொழில் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம், அதன்பிறகு இந்த திட்டங்கள் மூலமாக நிச்சயமாக பலன் கிடைக்கும். ஆனால் இத்திட்டங்களால் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்காது என்கிறார் பொருளாதார நிபுணர் ஸ்ரீதர் சுப்ரமணியம்


Advertisement

image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் 8 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,ஈரோடு, கோவை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களின் மூலமாக சுமார் 13,507 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 8 திட்டங்களில் 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக்காட்சி வழியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


Advertisement

image

கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் இலட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தமிழகத்திலும் பல்லாயிரக்காணக்கானோர் வேலையை பறிகொடுத்துள்ளனர். ஆகையால் புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாக மீண்டும் புதிதாக பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இதுபோன்ற தொழில் திட்டங்களை துவக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

இந்த திட்டங்களால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பேசுகிறார் பொருளாதார நிபுணர் ஸ்ரீதர் சுப்ரமணியம் “ இப்போது செய்யப்படும் புரிந்துணர்வு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம், அதன்பிறகு இந்த திட்டங்கள் மூலமாக நிச்சயமாக பலன் கிடைக்கும், அதனால் முதல்வரின் முயற்சி வரவேற்கதக்கதே. அதனால் இந்த திட்டங்கள் மூலமாக வேலைவாய்ப்புகள், பலன்கள் கிடைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. இவ்வாண்டு மார்ச் தொடங்கி இப்போதுவரை தமிழகத்தில் பல்லாயிரம் பேர் வேலையிழந்துள்ளனர், பல நூறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் நஷ்டத்தில் இயங்குகிறது. அதனால் புதிய தொழில்களை தொடங்குவதில் காட்டும் முனைப்பை நலிவடைந்த தொழில்களை மீட்பதிலும் அரசு காட்ட வேண்டும். அப்போதுதான் இன்னும் பல்லாயிரம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகாமல் தடுக்கலாம். எனவே நலிவடைந்த தொழில் நிறுவனங்களை காப்பதும், வேலையிழந்தவர்களுக்கு மாற்றுவேலை உருவாக்குவதுமே இப்போதைக்கு முக்கியம்” என்கிறார்


Advertisement

image

தொடர்ந்து பேசும் அவர் “நம் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொருளாதாரம் சரிந்துவருகிறது, அப்போதிலிருந்தே பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். ஆனால் இப்போது கொரோனோ பொதுமுடக்கம் பொருளாதார வீழ்ச்சியின் வேகத்தை இன்னும் வேகமாக்கிவிட்டது. பொருளாதார உற்பத்தி மற்றும் வாங்கும் சக்தி என்று இரண்டாக பிரிக்கலாம். இப்போது மக்களிடம் வாங்கும் சக்தி முழுமையாக பாதித்துள்ளது. உற்பத்தி மற்றும் வாங்கும் சக்தியை சரியாக பராமரிப்பதுதான் அரசின் கடமை. இப்போது மத்திய, மாநில அரசுகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நிறுவனங்களுக்கு மட்டுமே பல உதவிகளை செய்துவருகிறது. ஆனால் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க எந்த உதவியும் செய்யவில்லை. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கவில்லை என்றால் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது முடியாத காரியம்” என்கிறார்

loading...

Advertisement

Advertisement

Advertisement