2020 ‘டி20 உலகக் கோப்பை’ 2021க்கு மாற்றம் : இந்தியாவில் ‘2023’ உலகக்கோப்பை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் 2021-ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.


Advertisement

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருந்த சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை, அதே ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

ஆனால் 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை எந்த நாட்டில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இந்தியாவில் நடத்தப்படும் என்றும், அந்தத் தொடர் நவம்பர் 26ல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உலகக் கோப்பை தொடர் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் நிலையில், 2023ல் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு சோதனை வெற்றி

loading...

Advertisement

Advertisement

Advertisement