திருச்சி சிறுமி தற்கொலை விவகாரம்: நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட இளைஞர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காதல் ஆசைக்காட்டி சிறுமியை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்


Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகளான சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம், பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி (22) என்ற இளைஞர் காதல் என்ற பெயரில் மோசடி செய்து கர்ப்பமாக்கியுள்ளார். அத்துடன் சிறுமியை ஏமாற்றிவிட்டு, காதலை முறித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி காவல்நிலையத்தில் புகாரளிக்க, முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு ராம்கி மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதற்கிடையே மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

image


Advertisement

சிறுமியின் பெற்றோர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியின்படி, ஏமாற்றிய இளைஞர் சிறுமியின் அத்தை மகன் என்பது தெரியவந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கு தங்கை மகனான ராம்கி சிறுமியுடன் காதல் ஆசை கூறி பழகி, கர்ப்பமாக்கியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கொந்தளிக்க, ராம்கி மீது நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் வழக்கறிஞர்,  வீட்டில் ராம்கியை தங்க வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், “கருவை கலைத்துவிட பணம் கொடுப்பதாக கூறினர். பணத்தை வாங்க மறுத்து விட்டோம். இதனால் எங்களிடம் தகராறுக்கு வந்தனர். எங்களுக்கு படிப்பறிவு இல்லாதததால் எங்களை ஏமாற்றி விட்டனர்” என்று சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்

image


Advertisement

இந்நிலையில் வாலிபர் ராம்கியை, வையம்பட்டி போலீசார் கைது செய்து அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட ராம்கி மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ராம்கியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார், பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு ராம்கி கொண்டு செல்லப்பட்டார்.

திண்டுக்கல்: மது போதையில் வனத்துறை அலுவலக உதவியாளர் தீக்குளிப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement