JUST IN

Advertisement

தஞ்சை: கொரோனாவுக்கு 13 வயது சிறுவன் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக  சிகிச்சைப் பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.


Advertisement

image 

சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக  அதிகரித்த வண்ணம் உள்ளது. தஞ்சையில் 396 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 169 ஆகும். இறப்பு 1 என உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் தசை இணைப்பு திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


Advertisement

image

இந்நிலையில் சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் அச்சிறுவன்  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக இன்று சிறுவன் உயிரிழந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement