30 வயதான பெண் புற்றுநோய்க்காக சிகிச்சைக்கு சென்றபோது அவர் ஒரு ஆண் என்பதைக் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் பிர்பம்(30). இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 30 வருடங்களாக இவர் எந்த பிரச்னையும் இல்லாமல் எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லாதவரை.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அனுபம் தத்தா மற்றும் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சவுமன் தாஸ் தங்களது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது, அவரது உண்மையான பாலின அடையாளத்தை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
அதாவது சோதனைகள் செய்ததில் பிர்பமுக்கு 'ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம்' நோய் என்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மரபணு ரீதியாக அவர் ஆணாக பிறந்துள்ளார். ஆனால் ஒரு பெண்ணின் அனைத்து உடல் பண்புகளையும் கொண்டிருக்கிறார். இதுதான் அந்த அதிர்ச்சியான தகவல்.
இதுகுறித்து மருத்துவர் தத்தா கூறும்போது, “தோற்றம், குரல், மற்ற உறுப்புகளின் வளர்ச்சி என அனைத்திலும் அவர் பெண் தான். ஆனால் கருப்பைகள் பிறந்ததிலிருந்தே அவருக்கு இல்லை. அவள் ஒருபோதும் மாதவிடாயை அனுபவித்ததில்லை. இது மிகவும் அரிது. மேலும் ஒவ்வொரு 22,000 பேரில் இதுபோன்று ஒருவரை காணலாம். அவருக்கு வயிற்று வலி எனக்கூறியதும் நாங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டோம். அதைத் தொடர்ந்து அவருக்கு டெஸ்டிகுலர் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவளது விந்தணுக்கள் உடலுக்குள் வளர்ச்சியடையாமல் இருந்ததால், டெஸ்டோஸ்டிரோன் சுரக்கவில்லை. அது அவருக்கு பெண்ணின் தோற்றத்தை கொடுத்துள்ளன.
கொரோனாவிலிருந்து மீண்ட நூறு வயதை கடந்த முதியவர்..!
சோதனை அறிக்கைகள் அந்த பெண்ணுக்கு குருட்டு யோனி இருப்பதாக தெரிவித்தது. பின்னர், டாக்டர்கள் காரியோடைப்பிங் பரிசோதனையை நடத்த முடிவு செய்தனர். அதில், அவரது குரோமோசோம் XX என அல்லாமல் XY என இருந்தது. தற்போது, அவர் கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.
ஒரு ஆண் பெண்ணாக வளர்ந்துள்ளார். அவர் ஒரு தசாப்தமாக திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த ஆலோசனை கூறி வருகிறோம். இந்த ஜோடி குழந்தை பெற பல முறை முயற்சித்தாலும் தோல்வியடைந்தது தெரியவந்தது” எனத் தெரிவித்தார்.
மேலும், “இது அநேகமாக மரபணுக்களில் இருக்கலாம். நோயாளியின் இரண்டு தாய்வழி அத்தைகளுக்கும் கடந்த காலங்களில் ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது” என புற்றுநோயியல் நிபுணர் கூறினார்.
Loading More post
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை