52 சீன செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய எல்லையான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் இரவு இந்திய - சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 52 சீன செயலிகளை நீக்க வேண்டும், அல்லது புறக்கணிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்றுகொண்டிருப்பதாகவும், அதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே டிக்டாக், யுசி புரோசர், ஹலோ சாட், பப்ஜி கேம், ஷேர் ஹிட், சென்டெர், பியூட்டி ப்ளஸ், கிளின் மாஸ்டர், ஜூம் விடியோ மீட்டிங் உள்ளிட்ட செயலிகளை புறக்கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஜூம் செயலி மூலம் வீடியோ மீட்டிங் நடத்துவதினால், இந்தியர்கள் கண்காணிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புத் தன்மைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், பயன்பாட்டாளர்கள் இதனை நீக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்றது என்ற வகையில் ஜூம் செயலியை தைவான், ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட செயலிகள் மூலம் சீனா, பயன்பாட்டாளர்களின் தகவலைக் கொண்டு உளவு பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை