JUST IN

Advertisement

“சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது” - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


Advertisement

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.

image


Advertisement

இதனிடையே, லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் மோதல் சம்பவம் குறித்து மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைத் தளபதிகள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

image

இதனிடையே கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, நேற்று 21 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது லடாக் எல்லையில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்த நாடாவது அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் பலம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். நேரம் வரும்போது தங்கள் சக்தி மற்றும் வலிமையை காட்டுவோம் என தெரிவித்தார்.


Advertisement

image

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைசர் ஜெய்சங்கர், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது எனக் கூறியுள்ளார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் தொலைபேசியில் ஜெய்சங்கர் உரையாடினார். இந்தப் பேச்சு வார்த்தையில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஜெய்சங்கர், சீன தரப்பு அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கால தேவை வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்தப் பேச்சுவார்த்தையில் ஒட்டுமொத்த நிலைமை ஒரு பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான செய்தியை ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வெளியாகியுள்ளது.

 

“மகன் இறந்துவிட்டான், 2 பேரன்களை அனுப்புவேன்” - வீரமரணம் அடைந்தவரின் தந்தை

Related Tags : chinaindia
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement