மார்ச் 24-ல் தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு மறு வாய்ப்பு..!

School-education-department-give-one-more-chance-for-12th-students--who-missed-final-exam

12-ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வை தவறவிட்ட மாணவர்களிடம் மறுத் தேர்வெழுத விருப்பக் கடிதம் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

கடந்த மார்ச் 24-ஆம் தேதி 12-ஆம் வகுப்புக்கான வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகள் நடத்தப்பட்டன. கொரோனா அச்சத்தால் 32 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு ஜூன் 18-ஆம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் அந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் தேர்வை தவறவிட்ட மாணவர்களை தொடர்புகொண்டு, மீண்டும் தேர்வெழுத விருப்பக் கடிதம் பெற்று, அதனை 26-ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“நேரம் வரும்போது பலத்தை காட்டுவோம்” : பிரதமர் மோடி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement