JUST IN

Advertisement

கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறிய மேலூர் நகர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேலூர் நகர் பகுதிகளில் கடந்த 25 நாட்களாக யாருக்கும் புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாததால், கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மேலூர் நகர் மாறி உள்ளதாக நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் உள்ள 27 வார்டுகளில், சிவகங்கை ரோடு, குபேரன்நகர், கோட்டைக்கிணறு, காந்திஜி பூங்கா ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா வைரஸ்: அமெரிக்கா முதல் ...


Advertisement

இதில் நகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் கடந்த 1ஆம் தேதி குணமடைந்து இல்லம் திரும்பினார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் அந்த பகுதியில் மட்டும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தமிழகத்தில் 26 மாவட்டத்தில் கொரோனா ...

இந்நிலையில் அவரின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததாலும், புதியதாக யாருக்கும் தொற்று ஏற்படாததையடுத்தும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மேலூர் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.இதனால் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நகர் பகுதிகளில் யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்படாததால், கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மேலூர் நகர் பகுதி மாறி உள்ளது. மேலும் நகர் பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நகராட்சி சார்பில் ஊழியர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement