JUST IN

Advertisement

கொரோனாவிலிருந்து மீண்ட 113 வயது ஸ்பெயின் நாட்டு மூதாட்டி - உறவினர்கள் மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


ஸ்பெயினில் 113 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டிருப்பது அனைவருக்கும் நம்பிக்கையளித்துள்ளது.


Advertisement


மரியா பிரன்யாஸ் என்ற மூதாட்டி 1907 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். அங்குச் சிறிது காலம் வாழ்ந்த அவர் அதன் பின்னர் ஸ்பெயினுக்குக் குடியேறினார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.இவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டிலேயே மரியா தனிமைப்படுத்தப்பட்டார்.

வீட்டிலிருந்தே அவருக்குக் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். இந்தத் தள்ளாத வயதில் தைரியமாக நோய்த் தொற்றை எதிர்த்து அவர் மீண்டிருப்பது பலருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர் மரியா, நாட்டிலேயே மிக மூத்த வயது நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

image

இது குறித்து மரியா கூறும் போது “ கொரோனா தொற்று எனக்கு எங்கிருந்து பரவியது என்பது தெரியவில்லை. இப்போது என்னுடைய உடல்நலம் சீராக இருக்கிறது. அனைவருக்கும் ஏற்படக்கூடிய சிறிய வலிகள் மட்டும்தான் இருக்கிறது. என்னுடைய சிகிச்சைக்கு உதவியாக இருந்த மருத்துவருக்கு நன்றி” என்றார்.

image


Advertisement

மரியா மகள் ரோசா கூறும் போது “ எனது அம்மா மிகவும் வலிமையானவர். நேர்மறை சிந்தனை கொண்டவர். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்குச் சிறுநீர் தொற்றும் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் அவர் மீண்டு விட்டார்” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement