என் அனுபவத்தில் உன்னைப் போல நிறைய வீரர்களைப் பார்த்திருக்கிறேன் என்னை முட்டாளாக்க நினைக்காதே என்று தோனி தன்னிடம் கோபமாகக் கூறியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் நடைபெறவிருந்து ஐபிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓய்வில் வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். மேலும் சிலர் இன்ஸ்டாகிராம் வழியாக சக கிரிக்கெட் வீரர்களுடன் தங்களது மறக்க முடியாத தருணங்கள் குறித்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரியுடன் இன்ஸ்டாவில் பேசிய ஷமி தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது தோனி குறித்துப் பேசிய ஷமி, "2014 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். அந்தப் போட்டியில் மெக்கலம் மிகச் சிறப்பாக விளையாடினார். நான் பவுலிங் செய்தபோது மெக்கலம் கொடுத்த கேட்சை கோலி விட்டுவிட்டார். இதனால் நான் மிகவும் கடுப்பாகிவிட்டேன். தொடர்ந்து விளையாடிய மெக்கலம் 300 ரன்களை குவித்தார். நியூசிலாந்து அணி வலுவான நிலைக்குச் சென்றது. அப்போதே கோலி அந்த கேட்சை பிடித்திருந்தால் 14 ரன்களில் மெக்கலம் அவுட்டாகி இருப்பார்" என்றார்.
மேலும் தொடர்ந்த ஷமி, "மெக்கலம் 300 ரன்கள் மேல் அடித்ததால் கடுப்பாகிப்போன நான் அவரை அவுட்டாக்க வேண்டுமென்று பவுன்சர்களை வீசினேன். ஆனால் அது விக்கெட் கீப்பர் தோனி தலைக்கு மேலே சென்று 4 ரன்கள் ஆனது. தொடர்ந்து இன்னொரு பவுன்சரும் அப்படியே சென்றது. இதனையடுத்து ஆட்ட நேர முடிவில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருக்கும்போது. ஏன் இப்படிப் பந்துவீசினாய் என தோனி கேட்டார். அதற்கு நான் பந்து கையிலிருந்து நழுவிவிட்டது என்றேன். அதற்கு அவர் நான் நிறைய வீரர்களைப் பார்த்திருக்கிறேன், என்னிடம் பொய் சொல்ல வேண்டாம். நான் உன்னுடைய கேப்டன் என்னை முட்டாளாக்க நினைக்க வேண்டாம்" என்றார்.
தோனி குறித்துத் தொடர்ந்த ஷமி, "என்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டிகள் மூன்றுக்கும் தோனி அண்ணன்தான் கேப்டன். நீங்கள் அவரிடம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அசாத்தியமான புத்திசாலியான மனிதர் அவர்" எனக் கூறியுள்ளார்.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'