அஜித்தின் ‘வலிமை’யில் 5 வித ரசனைகளில் ஐந்து பாடல்கள்? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 அஜித்தின் ‘வலிமை’ படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இதனை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.  இவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் அஜித். அதாவது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தினை அடுத்து இதில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பாதி நடந்து முடிந்துவிட்டன. இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பதற்காகப் படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகமே முடங்கியது. அதனால் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. எனவே படக்குழு வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்த் திரை உலகிலும் தற்சமயம் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
image
 
ஆகவே இந்தப் படம் பற்றிய மேலும் புதிய அறிவிப்பிற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் படம் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவ்வாறு முடிக்கப்படாவிட்டால் வெளியாவதில் தாமதம் நேரலாம். 
 
 
இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது. ‘வலிமை’யில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. ஆகவே அவரது ரசிகர்கள் மேலும்  உற்சாகத்தில் உள்ளனர். ‘மங்காத்தா’ படத்தின் மூலம் அஜித், படத்திற்குத் தரமான தீம் இசையை வழங்கிய யுவன் சங்கர் ராஜாதான் இதற்கும் இசையமைத்து வருகிறார்.  ‘வலிமை’க்கும் அவர் மிகத் தரமான பாடல்களைத் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஐந்து பாடல்களும் ஐந்துவிதமான ரசனைகளில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த 5 பாடல்களில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து யுவன் வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு பாடல் படமாக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
 
image 
 
இதில் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்னவென்றால், தனது ‘தீம்’ மியூசிக் மூலம் அஜித்திற்கு அசைக்க முடியாத ஒரு கெளரவத்தை ஏற்படுத்திக் கொடுத்த யுவன், இந்தப் படத்திற்காக ஏதேனும் தீம் மியூசிக்கை அமைத்துள்ளாரா? அப்படி என்றால் அது எவ்வாறு இருக்கும் என்பதே அது. அதற்கான விடை விரைவில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பும்  உள்ளது. 
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement