தமிழ் சினிமாவானது தற்போது இரு அளவுகளின் கீழ் பிரித்துப் பார்க்கப்படுகிறது. சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது. விஜய், அஜித் போன்றவர்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கம் கிடைப்பதில்லை. அல்லது தாமாகவே சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் ஒரு சினிமாவை அதன் தரம் என்ற அளவுகோளில் இருந்து பார்க்க நாம் தவறிவிட்டோம். நாயக பிம்பங்களால் ஒரு சினிமாவிற்கு கிடைக்கும் வரவேற்பு சர்வதேச தரத்துடன் உருவாகும் சில நல்ல சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைப்பதில்லை.
இந்த குறைகளையெல்லாம் அடித்து நொறுக்கி சரி செய்து வருகிறது OTT., அதாவது over the top streaming எனப்படும் இணையதள சினிமாத் திரை. சினிமா டிக்கட்டுகளின் விலை உயர்வு போன்ற காரணங்களால் குடும்பம் குடும்பமாக திரையரங்கம் செல்லும் கொண்டாட்டமே கிட்டத் தட்ட வழக்கொழிந்து வருகிறது., என்றாலும் கலை எப்போதும் சுயம்பு. அது தனக்கான கதவுகளை தானே திறந்து கொள்ளும். கலை ஒரு நதி போல மக்களை எதாவது ஒரு வழியில் அந்தந்த காலகட்டத்துக்கு தகுந்தாற் போல போய் சேர்ந்துவிடும்.
கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சில படங்கள் திரையரங்குகளில் வெகுநாட்கள் ஓடவில்லை. ஒத்தசெருப்பு., சில்லு கருப்பட்டி., கேடி கருப்பு துரை போன்ற படங்களை இந்த வகைமைக்குள் வரிசை படுத்தலாம்., என்றாலும் இந்த படங்கள் எல்லாம் தற்போது முறையான காப்புரிமையோடு நெட்பிளிக்ஸ் அமேசான் போன்ற தளங்களில் காணக் கிடைக்கிறது. இது டிஜிட்டல் யுகத்தின் குறிப்பிடத்தக்க கலைப்புரட்சி என்றே சொல்லலாம்.
ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றி கதை சொல்லும் புதிய முயற்சியினை பார்த்திபன் தனது ஒத்த செருப்பு படத்தின் வழியாக செய்தார். சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட இந்தப் படம் பலராலும் பாராட்டப்பட்டது. எல்லோரும் திரையரங்கு சென்று இப்படத்தை பார்ப்பதற்குள் இப்படம் திரையரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால், இப்படத்தை தவற விட்ட ரசிகர்கள் இதனை தற்போது நெட்பிளிக்ஸில் காணலாம். அடுத்து சில்லு கருப்பட்டி. இயக்குநர் ஹலிதா ஷமீமின் இப்படைப்பு நான்கு வெவ்வேறு தளங்களில் வாழும் மனிதர்களின் வாழ்வை அன்பு கொண்டு தைத்து காண்பித்தது. இப்படமும் வெகுஜனங்களை சென்றடைவதற்குள் திரையரங்கை விட்டு வெளியேறியது. தற்போது இப்படம் OTT தளத்தில் காணக்கிடைக்கிறது.
கேடி என்ற கருப்பு துரை என்ற சினிமாவை இயக்கியிருக்கிறார் மதுமிதா. கிராமத்து குடும்பமொன்றில் நோய்வாய்பட்டு படுத்துக் கிடக்கும் பெரியவரை கொன்றுவிடலாம் என முடிவு செய்கிறது அவரது குடும்பம். அதனை அறிந்த பெரியவர் அங்கிருந்து தப்பித்து அருகாமை கிராமங்களில் அதுவரை வாழாத ஒரு வாழ்வை வாழ்கிறார். அவருக்கு தற்காலிக துணையாக குட்டி என்ற சிறுவன் கிடைக்கிறான். இவ்விருவருக்கும் இடையில் நடக்கும் கலகல காட்சிகளும் உணர்வு பூர்வமான சம்பவங்களும் தான் இப்படம். இப்படமும் கூட ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது என்றாலும் திரையரங்கில் வெகுநாட்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
இப்படியாக பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு நல்ல வணிக வாய்ப்பினை OTT தளங்கள் ஏற்படுத்தித் தருகின்றன. இவை தவிர நேரடியாக OTT தளங்களில் வெளியிடுவதற்கு என்றே பிரத்யேகமான பல படங்கள் மற்றும் தொடர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகை இணைய தளங்களில் சென்சார் பிரச்னை இல்லை என்பதால் எந்த கவலை கட்டுப்பாடுகள் இன்றி ஒரு படைப்பாளி தனது படைப்பை அணுக முடிகிறது. தற்போது கொரோனா பாதிப்பினால் பலரும் வீடுகளில் முடங்கி இருக்கும் சூழலில் லட்சக்கணக்கானோர் இணையதளம் வழியாக சினிமா பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர்.
கொரோனாவில் இருந்து நாம் மீண்டு எழுந்தாலும் கூட மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் துவங்கி புதிய சினிமாக்கள் திரையரங்கம் வந்து சேர வெகுகாலம் பிடிக்கும் என்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்த சிலர். எனவே திரையரங்குகளுக்கு அடுத்து இந்த OTT தளங்கள் தான் கலைத்துறையில் கோலோச்சப் போகின்றன என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'