தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மேலும் உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image

''இந்த அறிகுறியெல்லாம் இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்'' - பீலா ராஜேஷ் ட்வீட்


Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 969 ஆக அதிகரித்திருந்தது. மேலும் ஈரோட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்திருந்தார். இதன்மூலம் கொரோனோவுக்கு பலியானோர்களின் எண்ணிக்கையானது 10 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்துவிட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement