[X] Close

“மூன்று மாதங்கள் வீட்டிலேயே இருங்கள்”: 15 லட்சம் மக்களுக்கு பிரிட்டன் அறிவுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் இடம்பெற்றுள்ளன. இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 233 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதனால், பிரிட்டன் அரசு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Advertisement

image

அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் சுமார் 15 லட்சம் மக்களை சுமார் மூன்று மாதங்கள் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு கூறியுள்ளது. “வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும், அதன் மூலம் நாட்டின் சுகாதார சேவையைப் பாதுகாப்பதோடு, மக்களின் உயிரினையும் பாதுகாக்க உதவுங்கள்” என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


Advertisement

திருப்பதியில் இரண்டரை லட்சம் லட்டுகள் தேக்கம் - ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு

கொரோனா பாதிக்கப்பட வாய்ப்புள்ள நபர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement