ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கும் மதுப் பிரியர்கள்: வைரலான டாஸ்மாக் வீடியோ

A-video-of-a-shop-in-Erode-stopping-by-a-meter-break-has-become-viral

ஈரோடு மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கேரள எல்லையை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

image


Advertisement

ஏற்கெனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஞாயிற்றுக் கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் வரும் 22 ஆம் தேதி சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். காய்ச்சல், தும்மல், இருமல் இருப்போர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார். அவசியம் எனில் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லுமாறும் தேவையில்லாமல் சென்று மருத்துவர்களை இடையூறு செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொது இடங்களுக்கு செல்வது கூட்டமாக இருப்பது என பலவற்றையும் தவிர்த்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மருத்துவர்கள் உட்பட அரசும் அறிவுரை வழங்கி வருகிறது. மேற்கொண்டு குறைந்த பட்சம் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பழகவும் அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை இடைவெளிவிட்டு நிறுத்தப்பட்டு, பின் ஒவ்வொருவராக மதுபானம் விநியோகம் செய்யப்படும் வீடியோ ஒன்று வைரலாக மாறியுள்ளது. கொரோ‌னா வைரஸ் பரவுவதை தடுக்க சோஷியல் டிஸ்டன்ஸ் எனப்படும் சமூக விலகலை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் இந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக, கடை ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலுள்ள டாஸ்மாக் கடை ஒன்றில்தான் இந்த அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. மேலும் இது மருத்துவர்களின் அறிவுரை அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. மதுபானம் வாங்க வருவோர் ஒரு‌மீட்டர் இடைவெளியில் நிற்பதற்கு உகந்தபடி வரிசையா‌க கோடுகள் வரையப்பட்டுள்ளன. அந்தக் கோட்டை மீறி பெரியவர் ஒருவர் கடைக்குள் நுழைய முயன்றபோது அங்கிருந்த ஊழியர் ஒருவர் அவரை குறிப்பிட்ட கட்டத்திற்குள் வரிசையில் செல்லுமாறு அறிவுரை வழங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை பலரும் ஷேர் செய்து கருத்திட்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement