நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
2012 டிசம்பர் 16... ஒட்டு மொத்த இந்தியர்களையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்திய அந்த கொடூர சம்பவம் அன்றுதான் அரங்கேறியது. தலைநகர் டெல்லியில், இருள் சூழ்ந்த இரவுவேளையில், ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், 23 வயதான இளம் மருத்துவ மாணவி. சிங்கப்பூர் வரை அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அடுத்த 13 நாட்களிலேயே அவரின் உயிர் பிரிந்தது. தைரியமான பெண் என பொருள்படும் வகையில் நிர்பயா என்றழைக்கப்பட்ட அவருக்கு நேர்ந்த துயரம், ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியது.
ம.பி.யில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
இவ்வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய்குமார், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சிறார் ஒருவரையும் சேர்த்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஓட்டுநர் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகள் தண்டனைக்குப்பின், அந்த 16 வயது சிறுவனை நீதிமன்றம் விடுதலை செய்தது. பாலியல் வன்கொடுமை, கொலை, கடத்தல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ், எஞ்சிய நால்வர் வைத்து நிர்பயா வழக்கு நகர்ந்தது.
பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணைக்குப்பின், 2013 செப்டம்பரில் அதிரடி தீர்ப்பை வழங்கியது டெல்லி கீழமை நீதிமன்றம். நாடே உற்றுநோக்கும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதுதான், அன்றைய பரபரப்புச் செய்தி. அதனை ஏற்காத குற்றவாளிகள், தண்டனையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்து அதிர்ச்சியளித்தனர்.
அதன்பின் உச்சநீதிமன்றத்தை நாடிய நால்வரும் அங்கும் மேல்முறையீடு செய்தனர். ஆனால், குற்றவாளிகளை கைவிட்ட நீதிபதிகள், மேல்முறையீடு மனு மட்டுமல்லாமல், அதன்பின் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தனர். உயிர்வாழும் பாதைக்கான ஒவ்வொரு கதவும் அடைக்கப்பட்டுக் கொண்டே வந்ததால், சட்டத்தில் தங்களுக்கிருக்கும் வாய்ப்புகளை 4 குற்றவாளிகளும் பயன்படுத்தத் தொடங்கினர். தூக்கு தண்டனையை காலதாமதம் செய்ய வேண்டுமென்ற நோக்கில், குடியரசுத் தலைவரிடம் தனித்தனியே கருணை மனுக்களை அளிக்கத் தொடங்கினர்.
பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் ? - மணமகன் உள்ளிட்ட 4 பேர் கைது
ஆனால், சட்டமும், நீதி தேவதையும் குற்றவாளிகளின் பக்கம் நிற்கவில்லை. கருணை மனுக்கள் அனைத்தையும் கருணை காட்டாமல் நிராகரித்தார் குடியரசுத் தலைவர். தொடர்ந்த அத்தனை வழக்குகளையும் பாரபட்சமின்றி தள்ளுபடி செய்தன நீதிமன்றங்கள். குற்றவாளிகளின் இந்த நடவடிக்கைகளால் இவர்களின் தூக்கு தண்டனைக்கான தேதி 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மார்ச் 20 ஆம் தேதி நால்வரும் தூக்கு தண்டனையை உறுதி செய்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலை நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.
Loading More post
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
இந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்!
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?
மதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!