தாயகம் திரும்ப முடியாமல் இத்தாலியில் தமிழக மாணவர்கள் 55 பேர் தவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற இயலாமல் தமிழக மாணவர்கள் 55 பேர் தவித்து வருகின்றனர்.


Advertisement

சீனாவி‌ன் வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால், சீனாவில் மட்‌டும் 80,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனினும், கொரோனா தொற்று பரவுவது சீனாவில் கட்டுக்குள் வந்துள்ளதாக‌ அந்நாட்டு சுகாதாரத்‌துறை கூறியுள்ளது.

image


Advertisement

சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதப்பு அதிகமாக உள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற இயலாமல் தமிழக மாணவர்கள் 55 பேர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ‌பாதிப்பு இல்லை என்ற உடல் தகுதி சான்றிதழ் கிடைக்காததால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 55 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

image


Advertisement

இதனால் மிலன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருவதாக யுவராஜ் என்ற மாணவர் புதிய தலைமுறையிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். மேலும் தாயகம் திரும்ப மத்திய அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா அறிகுறியுடன் வந்தவர் குறித்து அரசுக்கு தெரிவித்த மருத்துவர் பணிநீக்கம்?

loading...

Advertisement

Advertisement

Advertisement