[X] Close >

பணியில் டாக்டர் இல்லை...? செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்..!

No-doctor-at-work-----People-protest-at-chennai

 


Advertisement

பூந்தமல்லியில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளது.

பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி, கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவரது மனைவி நஸ்ரின். கர்ப்பமாக இருந்த நஸ்ரினுக்கு
நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை பூந்தமல்லியில் உள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார் அன்சாரி. அப்போது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.


Advertisement

image

வேலை நிறுத்தத்தால் சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு: இன்று பேச்சுவார்த்தை

 


Advertisement

இதையடுத்து அங்கிருந்த நர்ஸ் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நஸ்ரினுக்கு பெண் குழந்தை பிறந்தது என்றும் குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரசவத்தின்போது உரிய டாக்டர்கள் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்து விட்டது என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவர்கள் முறையாக அடையாள அட்டை அணியாமல் செல்போனை பார்த்து பணிபுரிந்தனர் என்றும் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

2-வது டெஸ்ட் ; நியூசிலாந்து வெற்றி - மீண்டும் ஒயிட்வாஷ் ஆன இந்தியா..!

image

இதனையடுத்து நஸ்ரினுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தமீம் அன்சாரி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close