2021 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், “மதத்தையும், மொழியையும் தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள். சிஏஏ என்றால் என்னவென்று மக்களுக்குப் புரியவில்லை. இந்த மண்ணை சேர்ந்தவர்களுக்கு சிஏஏ-வால் பாதிப்பு என்றால் தேமுதிக முதல் ஆளாக நிற்கும். சிஏஏ-வை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்
அதிமுகவுடன் ஆரம்பத்தில் கூட்டணி அமைக்கப்பட்ட போது, மாநிலங்களவை உறுப்பினர் சீட் கேட்கப்பட்டது. கிடைக்கிறதா ? இல்லையா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 2021 தேர்தல் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தேர்தலாக இருக்கும். எந்தக் கட்சிக்கும் அதிகப் பெரும்பான்மை கிடைக்காது. அதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி பற்றிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.
பொது நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் கலந்துக்கொள்ள தொடங்கியுள்ளார். முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரத்தில் பங்குபெறுவார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாத காலம் முன்பாகவே விஜயகாந்த் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்” எனத் தெரிவித்தார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!