இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் சிக்கிய உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.
படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள காஜல் அகர்வால், ''நான் உணரும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' என தெரிவித்துள்ளார்
Words cannot describe the heartache I feel at the unexpected,untimely loss of my colleagues from lastnight.Krishna,Chandran and Madhu.Sending love,strength and my deepest condolences to your families.May god give strength in this moment of desolation. #Indian2 @LycaProductions— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 20, 2020
விபத்து குறித்து பதிவிட்டுள்ள ரகுல் ப்ரீத் சிங், ''இது மிக மிக சோகம்'' என குறிப்பிட்டுள்ளார்.
Shocked to hear about the accident on the set of my film indian 2.. I don’t even know how to process the loss of lives.. my Heart goes out to families of the deceased .. extremely extremely sad ?— Rakul Singh (@Rakulpreet) February 20, 2020
''துயர செய்தியுடன் இது ஒரு சோகமான காலையாகிவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்'' என நடிகர் பிரசன்னா ட்வீட் செய்துள்ளார்.
A sad morning to wake up to the news of lives lost in mishaps. My prayers to the departed in #Indian2 sets and #KSRTCaccident . Deepest condolences to the families who lost their loved ones.— Prasanna (@Prasanna_actor) February 20, 2020
மேலும் நடிகை வரலட்சுமி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் ஆர்யா, லைகா தயாரிப்பு நிறுவனம் என திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தியன்2 விபத்து தொடர்பாக ட்வீட் செய்து தங்களது மனவருத்தத்தை பதிவு செய்துள்ளனர்
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’